tamilnadu

img

தொல்லியல் துறையின் சுற்றுலா தலங்கள் இன்று திறப்பு

புதுதில்லி:
தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்கள் திங்களன்று திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரதுறை அமைச்சகம் அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள் ளது. இதனால்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்கள்அனைத்தும் மூடப்பட்டன.  தமிழகத்தில் தஞ்சையில் பெரிய கோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.இந்நிலையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திங்களன்று திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.