ஜெய்ப்பூர், ஏப். 22 -தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்? என்று பிரதமர் மோடி, பகிரங்கமாக யுத்தவெறியைக் கிளப்பியுள்ளார். 2014 தேர்தலில் வளர்ச்சி.. வளர்ச்சி...என்று பேசிய பிரதமர் மோடியும், பாஜக-வினரும், தற்போது அதுபற்றி பேசுவதில்லை. ராமர் கோயில் கட்டுவோம்; காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை ரத்து செய்வோம்; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று மதரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு தொந்தரவு கொடுத்த பயங்கர வாதிகளை அவர்களின் இடத்துக்கே சென்று தாக்கி அழித்திருப்பதாகவும்; பாகிஸ்தானின் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் இந்தியா இனிமேல் அஞ்சாது என்றும் கூறியுள்ளார். மேலும், “பயங்கரவாதிகளின் மனதிலும், உள்ளத்திலும் மிகப்பெரிய அச்சத்தை பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கிறது” என்று தனக்குத்தானே கூறிகைதட்டிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, “இந்தியா ஒன்றும் தனது அணுஆயுதங்களை தீபாவளிக்கு வெடிப்ப தற்காக வைத்திருக்கவில்லை” என்றும் யுத்தவெறியைத் தூண்டியுள்ளார்.