tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்தில் மதம் சார்ந்த கூறுகள் வேண்டாம்.. 2016 ஆம் ஆண்டே மோடி அரசை எச்சரித்த மக்களவை முன்னாள் செயலாளர்

புதுதில்லி:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியுள்ள- இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், பவுத்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியது.

முன்பு 12 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அது குறைக்கப்பட்டதில் பெரிதாக ஆட்சேபணை இல்லை. ஆனால், இந்தச் சட்டத்திலிருந்து திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி வைத்து, பாரபட்சமாக நடந்துகொண்டதுதான் நாட்டையே தற்போது போராட்டத்திற்கு தூண்டிவிட்டுள்ளது. நாடே போராட்டக்களமாக மாறியுள்ளது. இதன்காரணமாக, முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்த பாஜக கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன. சட்ட வரையறைக்குள் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும் என்று பாஜக-வின் கூட்டணி கட்சியான அகாலிதளம் கோரிக்கை வைத்துள்ளது.இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தச் சட்டம்நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பார்வைக்கு விடப்பட்டபோது, ஒவ்வொரு மதத்தையும் தனித்தனியாக குறிப்பிடுவதில் உள்ள பிரச்சனையை, மக்களவையின் முன்னாள் செயலாளரும், அரசியல் சாசன வல்லுநருமான சுபாஷ் காஷ்யப் அப்போதே சுட்டிக் காட்டியது தெரியவந்துள்ளது.“இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் என மதங்களைப் பற்றிய எந்தவொரு குறிப்பையும் இந்த சட்டம் தவிர்க்க வேண்டும். சட்டத்தில் மதம் சார்ந்த கூறுகள் எதையும் இணைக்க வேண்டாம்.” என்று அரசிடம் கூறியதாகஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சுபாஷ் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்து, சீக்கியர்கள், பார்சிகள் என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக ‘துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்’ என்று பொதுவான வார்த்தையால் குறிப்பிடலாம் என்ற முன்மொழிவை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2019 ஜனவரியில் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை, அரசிடம் முன்வைக் கப்பட்டபோதும், காஷ்யப்பின் கருத்து, அவரின் பெயரில்லாமல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “சிறுபான்மையினருக்கான அளவுகோல் என்ன என்பதை இந்திய அரசியல்சாசனம் நிறுவவில்லை. சிறுபான்மையினர் என்பது மதம் சார்ந்து மட்டுமல்லாமல், பல்வேறு சூழ்நிலைகள் சார்ந்தும்சிறுபான்மையினர் வரையறுக்கப்படலாம். துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று இந்த சட்டத்தில் மேற்கோள் காட்டினால் யாருக்கெல்லாம் உதவநீங்கள் விரும்புகின்றீர்களோ அவர்கள்எல்லாம் இந்த சட்டத்தின் கீழ் வருவார் கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், முஸ்லிம்களை ஒடுக்குவதற்காகவே குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை கையிலெடுத்த மத்திய பாஜகஅரசு, சுபாஷ் காஷ்யாப்பின் ஆலோசனையை எப்படி ஏற்கும்? தன்னிச்சையாக மசோதா கொண்டுவந்து அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் மூலம் சட்டமாகவும் ஆக்கி விட்டது.

இந்நிலையில்தான் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் அளிக்கப்பட்ட, ‘துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்’ என்றதனது முன்மொழிவை, ஊடகங்களிடம் சுபாஷ் காஷ்யப் பகிர்ந்து கொண்டுள் ளார்.“என் கருத்து என்னவென்றால், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்றவற்றைக் குறிப்பிடுவது அவசியமில்லை. அது இல்லாமலேயே சட்டத்தின் நோக்கத்தை அடைய முடியும், என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் நான் கூறியிருந்தேன்”என்று பேட்டிஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களை ‘சட்டவிரோதம்’ என்று விமர்சித்துள்ள சுபாஷ் காஷ்யப், “அரசியலமைப்பைப் பொறுத்தவரை, சரியாகவோ அல்லது தவறாகவோ, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்’தான் ஒரு முடிவை எடுத்துள்ளனர்; இந்த ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு நாடாளுமன்றத்தை உச்சமாக வைத்திருக்கிறது” என்பதை போராட்டக்காரர் கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் தீர்வுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்தச் சட்டத்திற்கு எதிரான கேள்விகளை நீதிமன்றங்கள் மூலம் நாம் கேட்கலாம் அல்லது வருகின்ற தேர்தல்களில் மக்களவையில் தற்போது நிலவும் நிலைமைமாறிய பின்பு மாற்றங்களை உருவாக்கலாம். அல்லது புதிய திருத்தங்களை மேற்கொண்டு அதில் பெரும்பான்மை பெற முயற்சிகள் மேற்கொள்ளலாம்” என்றும் காஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.