tamilnadu

img

இனி வெளிநாடுகளில் கடன் கூட வாங்க முடியாது...

புதுதில்லி:
இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (CII) 125-ஆவது கூட்டத்தில்பிரதமர் நரேந்திர மோடி, செவ் வாய்க்கிழமையன்று ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அப்போது, பொருளாதாரம் விரைவில் மீண்டுவரும்; அது அவ்வளவு கடினமானதுஅல்ல! என்று தொழில் முதலீட்டாளர்களுக்கு அவர் நம்பிக்கை ஏற் படுத்தினார்.

ஆனால், சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான ‘மூடீஸ்’ (Moody’s), இந்தியாவின் கடன்தர நிர்ணயத்தை 22 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் பிஏஏ-3 (Baa3) என்ற தரத்திற்கு குறைத்துஅதிர்ச்சி அளித்துள்ளது.முதலீட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு, லாபத்திற்கான உத்தரவாதம்,எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான பொருளாதார ஆரோக்கியம் ஆகியவற்றை வைத்து, ஒருநாட்டின் தரம் (கிரேடு), ‘மூடிஸ்’, ‘எஸ் அன்ட்பி’, ‘பிட்ச்’ போன்ற சர்வதேச மதிப்பீட்டுநிறுவனங்களால் கணக்கிடப்படுகிறது.

மேற்கண்ட நிறுவனங்கள் ஒவ் வொரு நாட்டிற்கும் அளிக்கும் மதிப்பீட்டைப் பொறுத்தே, அந்நாடுகளுக்கு முதலீடுகள் வருவது மட்டுமன்றி, அவை மற்ற நாடுகளில் கடன்கள் பெறுவதும் எளிதாகும். குறைந்த வட்டிக்குகடன் கிடைப்பதற்கும் கிரேடு முக்கியம். இதில் ‘ஏ’ வரிசை கிரேடு என்பது முன்னணி இடத்தை குறிப்பதாகும். அதற்கு அடுத்ததாக ‘பி’ வரிசை, ‘சி’வரிசை கிரேடுகள் உள்ளன.அந்த வகையில் இந்தியாவிற்கு ‘பி’ வரிசையில் பிஏஏ-2 என்ற கிரேடை‘மூடிஸ்’ நிறுவனம் வழங்கியிருந்தது. நீண்டகாலமாக இந்த இடத்திலேயே இந்தியா இருந்து வந்தது.1998-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாஜ்பாய் தலைமையிலான பாஜகஆட்சியில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை விதித்தன. இதனால், இந்தியாவின் கிரேடை பிஏஏ2-விலிருந்து பிஏஏ-3 என்று ‘மூடிஸ்’ குறைத்தது. எனினும்,கடந்த 2018-ஆம் ஆண்டு, இந்தியாவின்ரேட்டிங்கை பிஏஏ-2 என பழைய நிலைக்கே உயர்த்தியது.ஆனால், தற்போது இந்தியாவின் கடன்தகுதி நிலையை மீண்டும் பிஏஏ-3 என்று குறைத்து, முதலீட்டாளர்களையும், இந்திய ஆட்சியாளர் களையும் ‘மூடிஸ்’ அதிர்ச்சிக்கு உள் ளாக்கி இருக்கிறது.

இவ்விஷயத்தில் இந்திய ஆட்சியாளர்கள் கொரோனாவை கைகாட்டிவிடுவார்கள் என்று நினைத்தோ என்னவோ, தரமதிப்பீடு சரிவுக்குகொரோனா மட்டும் காரணமில்லைஎன்று ‘மூடிஸ்’ தெளிவுபடுத்தியுள்ளது.ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில்தான் இந்தியா இருந்தது. கொரோனா பாதிப்பு, அதை மிக மோசமாக்கி இருக்கிறது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது,2016-இல் இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.3 சதவிகிதமாக இருந்தது. 2019 நிதியாண்டு இறுதியில் அது 4.2 சதவிகிதமாக சரிந்தது. தற்போதைய நிலையில் இன்னும் மோசமாக 4.0 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும் என்று குறிப்பிட்டுள்ளது.இந்தியாவிற்கு மூடிஸ் நிறுவனம், தற்போது வழங்கியிருக்கும் பிஏஏ-3 தரநிலை, ‘முதலீடு செய்யலாம்’ என்பதற்கான தரத்திலேயே கடைசி தரமாகும். ‘சி’ வரிசைக்கு முந்தைய தரம். அதாவது, குறுகியகாலக் கடனை மட்டும் செலுத்தும் சக்தியைக் கொண்ட நாடு என்ற 10-வது வரிசைத்தரம்.இதனால், கடன் வாங்குவதற்குகூட முடியாத நிலைக்கு, இந்திய பொருளாதாரம் தள்ளப்பட்டுள்ளது.