கொச்சி:
தங்க கடத்தல் வழக்கு விசாரணையில் ஒரு பகுதியாக கேரள முன்னாள் ஐடிசெயலாளர் எம்.சிவசங்கரனிடம் என்ஐஏதலைமையகத்தில் நடந்து வந்த விசாரணை முடிவடைந்தது.
வழக்கில் சிவசங்கரனுக்கு எதிராகஎழுந்த குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த 2 நாட்களாக 20 மணி நேரம் நீண்டவிசாரணை நடைபெற்றது. செவ்வாயன்று காலை பத்து மணிக்கு துவங்கியவிசாரணை பத்து மணி நேரத்துக்கு மேல்நீண்டது. என்ஐஏ டிஐஜி கே.பி.வந்தனாஉள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிவசங்கரனை விசாரித்தனர். வாக்கு மூலத்தை படித்துக் காட்டிய பிறகு அதில் கையொப்பமிட்டார். பின்னர் அவர் திருவனந்தபுரத்துக்கு அவரது சொந்த வாகனத்தில் திரும்பினார்.
சிவசங்கரனின் நட்பை, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சொப்னாசுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள்கடத்தலுக்காக தவறாக பயன்படுத்தினார்களா என்பதை கண்டுபிடிக்க என்ஐஏமுயன்றது. இந்த வழக்கில் இதுவரைசேகரிக்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில் விசாரணை நடந்துள்ளது. தேவைஏற்பட்டால் மீண்டும் அழைக்கப்படலாம் என்பதை தெரிவித்து செவ்வாயன்று இரவு எட்டரை மணியளவில் அவரைவிடுவித்தனர். தலைமைச் செயலகத் தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த பிறகே மீண்டும் விசாரணைக்கு சிவசங்கரன் அழைக்கப்படுவாரா என் பது தெரியவரும். ஏற்கனவே திருவனந்தபுரத்தில் ஐந்தரை மணி நேரம் சிவசங்கரனிடம் விசாரணை நடந்தது. அப்போது தங்ககடத்தல் வழக்கில் குற்றவாளிகளான சிலருடன் ஏற்பட்ட நட்பு தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்ட தோல்வி என அவர்தெரிவித்துள்ளார். அவரை தங்க கடத்தலுடன் தொடர்பு படுத்தத்தக்க சான்றுஇதுவரை கிடைக்கவில்லை என சுங்கத்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.