புதுதில்லி:
கடந்த 64 ஆண்டுகளாக மருத்துவ துறையை நிர்வாகம் செய்து வந்த, ‘இந்திய மருத்துவ கவுன்சில்’ (எம்சிஐ)கலைக்கப்பட்டது.அதற்கு பதிலாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ (என்எம்சி) அமலுக்கு வந்தது.
கடந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் தேசியமருத்துவ ஆணையத்திற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்தாண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மசோதாவிற்கு ஒப்புதல்அளித்தார். இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டு,‘தேசியமருத்துவ ஆணையம்’அமலுக்கு வந்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறைமுன்னாள் தலைவர் சுரேஷ்சந்திர சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள். ஆணையத்தின் செயலாளராக ராகேஷ் குமார் வாட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகக்குழுவின் பொ
துச் செயலாளராக பதவிவகித்தவர். இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 10உறுப்பினர்கள், 22 பகுதி நேரஉறுப்பினர்கள் உள்ளனர்.