tamilnadu

img

என் குழந்தைகள் இந்த புகைப்படத்தை பார்க்கக் கூடாது.... சங்- பரிவாரின் தாக்குதலுக்கு உள்ளான கட்டுமானத் தொழிலாளி முகம்மது ஜூபைர் கண்ணீர்

புதுதில்லி:
இஸ்லாமியர்களுக்கு எதிராக, தில்லியில் சங்-பரிவாரங்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் 21 பேர் களின் உயிர் பறிபோயிருக்கிறது. கெடுவாய்ப்பாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தில்லி வன்முறையின்போது, இஸ்லாமியர் ஒருவரை வெறிக்கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு தாக்கும் புகைப்படும் பலரையும் உலுக்கியெடுத்தது. இரும்புக் கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு, அந்தவெறிக்கும்பல் கொடூரமாகத் தாக்குவதும், படுகாயங்களுடன் அந்த இஸ்லாமியர் மண்டியிட்டுக் தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பதும் பார்ப்போரை பதறச் செய்தது.

‘ராய்ட்டர்ஸ்’ நிறுவன செய்தியாளர் டேனிஷ் சித்திக் எடுத்த அந்த புகைப்படம் உலகம் முழுவதும் சமூகவலைத் தளங்களில் வைரலானது. இந்நிலையில், தாக்கப்பட்ட அந்த இஸ்லாமியரின் பெயர், தில்லி சந்த் பாக் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஜூபைர்என்பதும், அவர் ஒரு சாதாரண கட்டுமானத் தொழிலாளி என்பதும் தெரிய வந்துள்ளது.கடந்த திங்கட்கிழமை, தொழுகைக் காக வெளியே சென்ற அவர், குழந்தைகளுக்காக இனிப்புப் பண்டங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போதுதான் தலையில் வைத்திருந்த குல்லாவைஅடையாளம் கண்டு, திடீரென அவரைசூழ்ந்துகொண்ட சங்-பரிவாரங்கள், கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளன.

இதில், தலை, கை, கால்களில் காயமடைந்து மூர்ச்சையான நிலையில் கிடந்தஜூபேரை, அந்த வழியாகச் சென்ற சிலர்மீட்டு, தில்லி ஜிடிபி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, சிகிச்சைக் குப் பின்னர் அவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கிறார். மனைவிமற்றும் குழந்தைகளை பாதுகாப்பு கருதிஉத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முகம்மது ஜூபைர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.“அவர்கள் என்னை பயங்கரமாகத் தாக்கினார்கள். நான் வேண்டாம் என்றுகெஞ்சிய பின்னர்தான் அவர்கள் என்னைமேலும் கொடூரமாக தாக்கினார்கள்.

அவர்களில் சிலர், கபில் மிஸ்ராவின் (தில்லி பாஜக தலைவர்) பெயரை சொன்னார்கள். எனக்கு இதற்குமேல் எதுவும் ஞாபகம் இல்லை” என்று கூறியிருக்கும் ஜூபைர், “நான் தாக்கப்பட்டுக்கிடந்த அந்தப் புகைப்படத்தை என்னால் பார்க்க முடியவில்லை; பயத்தில் இப்போதும் கால்கள் நடுங்குகின்றன; நிச்சயமாக எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்த புகைப்படத்தைப் பார்த்துவிடக் கூடாது” என்றும் கண்ணீர் விட்டுள்ளார்.ஜூபைர் மீது நடந்த தாக்குதல் குறித்து, காவல்துறையில் புகார் எதுவும்அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, “யார் மீது நாங்கள் புகார்அளிப்பது? கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த கும்பல் மீதா? அதைநாங்கள் விரும்பவில்லை; நாங்கள்சிறு குடும்பமாக வசித்து வருகிறோம்; எங்களால் அவர்களை எதிர்த்து எதுவும்செய்ய முடியாது; நாங்கள் இங்குவாழ்வதற்காகவே பெரும்போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்; அவ்வாறிருக்கையில் எந்த தைரியத்தில் புகார் அளிப்பது?” என்று  ஜூபைரின்
அண்ணன் எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.