tamilnadu

img

புதுச்சேரியில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு

.புதுச்சேரி, மார்ச் 17- திரையரங்குகள் பொழுது போக்கு வணிக வளாகங்கள் மார்ச் 31  வரை மூடப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரி வித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசணைக் கூட்டம் செவ் வாய்கிழமை (மார்ச் 17) நடை பெற்றது.  கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசு செயலர்கள், ஜிப்மர் இயக்கு னர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறிய தாவது:- புதுச்சேரியில் இதுவரை 23 பேர் கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் பரி சோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. புதுச்சேரிக்கு பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் இருந்தும், காரைக் காலில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து, மாகிக்கு துபாயில் இருந்தும், ஏனாமில் சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரி சோதனையில் கொரோனா இல்லை என்றால் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும். புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலம். இதனால் சென்னையில் இருந்து இ.சி.ஆர் சாலை, திண்டிவனம் சாலை, விழுப்புரம் சாலை ஆகிய வற்றின் வழியாக வருபவர்களின் வாகனங்களை எல்லையிலேயே பரிசோதனை செய்ய மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். அதேபோல் திரையரங்குள், பொழுதுபோக்கு வணிக வளாகங்கள்,உடற்பயிற்சி கூடங்களும் மூடப்படும். தேர்வு இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப் படும். ஆசிரியர்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்படுவார்கள். மருத்துவ கல்லூரி மாணவர்கள் பெரிய மார்க்கெட், வியாபார நிலையங்க ளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். அனைத்து வாகனங்கலும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
ரூ.11 கோடி
வருவாய்துறை மூலம் பேரிடர் நிதியிலிருந்து ரூ.11கோடி செலவு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. உடனடியாக வென்டிலேட்டர், இன்சு லேட்டர், மாஸ்க் உள்ளிட்ட உபகர ணங்கள் வாங்க ரூ.7.5 கோடி நிதி செலவு செய்யப்படும். அதிகப்படி யான மருத்துவர்கள், செவிலி யர்களை நியமிப்பதற்கும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 விழுக்காடாக குறைந்துள்ளது. வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பரி சோதனை செய்யப்படுவார்கள். புதுச்சேரி பாரம்பரியமாக விளங்கும் சண்டே மார்க்கெட் வியாபாரம் அரசு உத்தரவு வரும் வரை மூடப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.