புதுதில்லி:
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் கள் மீது மத்திய பாஜக அரசு, காவல்துறை மூலம் நடத்திய வன்முறை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, நாடு முழுவதுமுள்ள கல் லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் கள் மீது நடத்தப்பட்ட வன் முறைக்கு, நடிகர் சித்தார்த் தனதுடுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த ஒருவிழாவில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசினார். மோடியும் அமித்ஷாவும் ‘கிருஷ்ணரும், அர்ஜூணரும் போன்றவர்கள்’ என்று துதிபாடினார்.இந்நிலையில், தற்போதைய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிட்டு, “மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணரும், அர்ஜூணரும் இல்லை; அவர்கள் சகுனி மற்றும் துரியோதன்கள்” என்று கடுமையாக சாடியுள்ளார். “மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என்றும் மோடிஅரசை சித்தார்த் வலியுறுத்தியுள்ளார்.