மும்பை
மகாராஷ்டிரத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.சட்டசபைத் தேர்தலில் சிவசேனா கட்சி,"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்" என வாக்குறுதி அளித்து இருந்தது. அந்த கட்சியின் கனவுத் திட்டம் என அழைக்கப்படும் ‘சிவ போஜன்’ திட்டம் குடியரசு தினத்தன்று அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை 10 ரூபாய்க்கு வழங்கப்படும். இதற்காகச் சிறப்பு உணவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட தலைநகரங்களில் மட்டும் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மலிவு மதிய உணவு கிடைக்கும். இந்த திட்டத்துக்கு மகாராஷ்டிர மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.