8 மாவட்டங்களுக்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை
திருவனந்தபுரம், ஆக.10- கேரளத்தில் எட்டு மாவட்டங்களில் 81 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் மழை, வெள்ளப்பெருக்கால் 43 பேர் உயிரிழந்தனர். சனியன்றும் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மலப்புறம் மாவட்டம் கவளப்பாறை பூதானம் காலனி, வயநாடு மேப்பாடி புத்துமலை ஆகிய இடங்களில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. மலப்புறம் முன்டேரியில் சுமார் 200 குடும்பங்கள் சிக்கி யுள்ளன. அவர்களுக்கு வேறு பிரச்சனை ஏதும் இப்போது இல்லை. ஹெலிகாப்டர் மூலம் உணவு கொண்டு செல்ல முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதிகளின் ஆறு களில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு பணிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள் ளது. பல்வேறு மீட்பு முகமைகள் ஒன்றி ணைந்து செயல்பட்டு வருகின்றன. மீன் தொழி லாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் அனைவரும் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுகிறார்கள். சொந்த உயிர்களை மறந்து மீட்பு பணியில் ஏராள மானோர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
கிராமமே மண்ணில் புதைந்த கொடுமை
மலப்புறம் மாவட்டத்தில் வியாழனன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டு 30 வீடுகள் இடிந்து 46 பேர் புதையுண்ட கவளப்பாறையில் சனி யன்று மீண்டும் இருமுறை நிலச்சரிவு ஏற்பட் டது. மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மழை நீடிக்கிறது. வீடுகளிலிருந்து கூக்குரல்களை கேட்க முடிந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். மீட்பு படை யினர் அப்பகுதிக்கு செல்ல முடியாத அவல நிலை நீடிக்கிறது.
முத்தப்பன் குன்றில் ஏற்பட்ட நிலச்சரிவால் கவளப்பாறையில் வீடுகளுக்கு மேல் நாற்பது அடி உயரத்தில் மண் மூடியுள்ளது. 2 குழந்தை கள் உட்பட மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. சனியன்று காலை மழை வலுவடைந்ததைத் தொடர்ந்து மீட்பு பணி சிறிது நேரம் தடை பட்டது. காலை 11 மணியளவில் எதிர் பகுதி யில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனாலும் மீட்பு பணி தொடர்ந்தது. மாலை மூன்றே முக்கால் மணிக்கு ஏற்கனவே வியாழனன்று ஏற்பட்ட நிலச்சரிவை ஒட்டிய பகுதியில் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். நிவாரண முகாம்களில் கணக்கெடுத்த அடிப்படையில் சுமார் 60 பேரை கவளப்பாறையில் காணவில்லை என தெரிய வந்துள்ளது. ஆபத்தான நிலை யில் மீட்பு பணியை தொடர முடியாத நிலை யில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மீட்பு பணி சனியன்று மாலை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கோட்டக்குன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் உள்ளவர்களை இதுவரை மீட்க முடியவில்லை. சாத்தங்குளம் சத்தி யனின் மனைவி சரோஜினி (50), மருமகள் கீது (22), ஒன்றரை வயது பேரக்குழந்தை ஆகி யோர் மண்ணில் புதையுண்டனர். இதுபோல் புத்துமலை அருகில் உள்ள ராணிமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60 பேர் வரை சிக்கியுள்ள னர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரு கிறது.