புதுதில்லி:
சீனப் படைகளுடன் மோதல் எழுந்துள்ள பின்னணியில், லடாக்கில் சாலைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், இங்கு சாலையமைக்கும் பணியில் ஈடுபட்டிருக் கும் தொழிலாளர்களுக்கு, மத்தியசாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 100 சதவிகிதம் முதல் 170 சதவிகிதம் வரைசம்பள உயர்வு அறிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூன் 1முதலே அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
புதிய உயர்வின்படி, இதுநாள்வரை ரூ. 16 ஆயிரத்து 770 சம்பளம்பெற்றுவந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், இனி 41 ஆயிரத்து 440ரூபாயும், ரூ. 25 ஆயிரத்து 700 சம்பளம் பெற்றுவந்த கணக்காளர்கள் (அக்கவுண்டண்ட்) ரூ. 47 ஆயிரத்து 360-இம், ரூ. 30 ஆயிரம் சம்பளம் பெற்றுவந்த சிவில் என்ஜினீயர்கள் ரூ. 60 ஆயிரமும், ரூ. 50ஆயிரம் சம்பளம் பெற்றுவந்த மேலாளர்கள் ரூ.1 லட்சத்து 12ஆயிரமும், சீனியர் மேலாளர்கள் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 600-ம்சம்பளமாக பெற உள்ளனர்.இது தவிர, ரூ. 5 லட்சத்துக் கான ஹெல்த் இன்சூரன்ஸ், ரூ. 10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு, போக்குவரத்து அலவென்ஸ்சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.