புதுதில்லி, ஏப்.14-பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறி,தொடர்ந்து 6 ஆண்டுகள் வசிக்கும்- இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற அனைத்து மதத்தினருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவதென மோடி அரசு முடிவு செய்தது.இதற்காக, மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், 1955-ஆம் ஆண் டின் குடியுரிமைச் சட்டத்தைத் திருத் தும் வகையில், புதிய மசோதா ஒன்றைக் கொண்டுவந்த மோடி அரசு, அதனை மக்களவையிலும் நிறைவேற்றியது. எனினும் இம்மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற் குள், ஆட்சி முடிந்ததால், மோடி அரசின் திட்டம் சட்டமாகாமல் போய் விட்டது.இந்நிலையில், தாங்கள் மீண்டும்ஆட்சிக்கு வந்தால், தேசிய குடியுரிமைப் பட்டியல் மசோதாவை நிறைவேற்றி, இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் தவிர மற்றவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று பாஜகதலைவர் அமித்ஷா கடந்த 11-ஆம் தேதிமறுபடியும் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது சிறுபான்மை மக் களை கொதிப்படைய வைத்தது.குறிப்பாக கேரள கிறிஸ்தவர் சங்கம், அமித்ஷாவின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளது. “நமதுநாட்டின் மதச்சார்பற்ற அடையாளத்தின் மீது பாஜக-வின் அறிக்கை,நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இது மக்களின் ஒற்றுமைக்கு விடப் பட்ட சவாலும் ஆகும். இதற்கு பாஜகதேசியத் தலைவர் அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும்” என்று கிறிஸ்தவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.