புதுதில்லி:
வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் தொடர்ந்து இரண்டா வது ஆண்டாக கேரளம் நாட்டிலேயே முன்னிலை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஐக்கியநாடுகள் அமைப்பு முன்வைத்து ள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை கடந்து கேரளம் 70 புள்ளிகளை பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தயாரித்துள்ள 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018இல் இமாச்சலப் பிரதேசத்துடன் முதலிடத்தை கேரளம் பகிர்ந்துகொண் டது. இம்முறை 69 புள்ளிகளுடன் இமாச்சல் பின்தங்கியுள்ளது.
தொழில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சிறந்த ஆரோக்கியம் நலவாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் மிளிரும் வளர்ச்சியே கேரளத்தை முன்னிலைப்படுத்தியது. தொழில் வளர்ச்சியில் 2018 ஆம் ஆண்டைவிட பாய்ச்சல் வேகமாக 68 புள்ளிகளிலிருந்து 88 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ஒருவர்கூட விடுபடாத வளர்ச்சி என்கிற லட்சியத் 2030இல் சாத்தியமாக்கும் வாய்ப்பை 16 குறியீடுகளாக நிதி ஆயோக்பரிசீலித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு பிரிவிலும் உள்ளவளர்ச்சியின் குறியீடு 100புள்ளிகளாக கணக்கிடப்பட்டுள் ளது. அதில் கேரளத்தின் தொழில் வளர்ச்சி-88, சுகாதாரம்-82, கல்வி-74, பசியற்ற மாநிலம்-74, பாலின சமத்துவம்-51 என்ற புள்ளிகளைப் பெற்று கேரளம் சாதனை படைத்துள்ளது. வறுமை ஒழிப்பு-64, நகர்ப்புற வளர்ச்சி-51 என்கிற நிலையில் கேரளம் முன்னிலை பெற்றுள்ளது. சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் இமாச்சலப் பிரதேசம் முன்னேற்றம் கண்டது. ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் 67 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. 50 புள்ளிகளுடன் பீகார் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 53 புள்ளிகளுடன் அருணாச்சலப் பிரதேசம் அடுத்த இடத்தில்உள்ளது. இந்த குறியீடு உலகளவில் அங்கீ கரிக்கப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் நிதி ஆயோக் தேர்ந் தெடுத்த முன்னுரிமை பட்டியல் களை அடிப்படையாகக்கொண்டது.
நிலையான வளர்ச்சி இலக்குகள்
செப்டம்பர் 2015 இல் ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாட்டால் நிலையான வளர்ச்சி இலக்குகள் வகுக்கப்பட்டன. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், தூய்மை மற்றும் நகர்ப்புற வாழ்க்கைக்கான 17 இலக்குகளையும் உச்சிமாநாடு அறிவித்திருந்தது.