இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற மாதம் முதல் விமானங்களை இயக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், 13 சர்வதேச வழித்தடங்களில் ஏப்ரல் இறுதிவரை விமான சேவையை நிறுத்தி வைக்க இருப்பதாக ஜெட் ஏர்வெஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.