tamilnadu

img

காரணத்தோடுதான் நாங்கள் காக்க வைத்தோம்... தொழிலாளர்க்கு பொறுமை இல்லை... நடந்து சென்று விட்டார்கள்...

புதுதில்லி:
நரேந்திர மோடி அரசு, மத்தியில்இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி,  மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குச் சிறப்புப் பேட்டி அளித் துள்ளார்.

\அதில், “புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொறுமை இல்லாததாலேயே அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து சென்றார்கள்” என்று கூறி அதிர்ச்சிஅளித்துள்ளார். பல வாரங்கள் உண்ண உணவின்றியும், தங்க இடமின்றியும் தவித்ததொழிலாளர்கள் மீதே பழியைத் தூக்கிப் போட்டுள்ளார்.அத்துடன், “புலம்பெயர் தொழிலாளர்களை ஊரடங்குக்கு முன்னதாகஅவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால், அது மாநில அரசுகளுக்கு பெரும் பிரச்சனைகளாக அமைந்திருக்கும். அப்போது மாநிலஅரசுகளிடம் போதிய சோதனை செய் யும் வசதிகளும், தனிமைப்படுத்தும் வசதிகளும் கிடையாது. ஆகவே புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முன்னதாக மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதற்காகவே தொழிலாளர்களை அவர்கள்இருக்கும் இடங்களிலேயே தங்கியிருக்க வைத்தோம்” என்ற புதிய காரணத்தையும் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, “புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்துக்கான அனைத்துச் செலவுகளையும் இந்திய ரயில்வேதான் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என்று பச்சைப் புளுகு ஒன்றையும் அவிழ்த்து விட் டுள்ளார்.