லக்னோ
மத்திய அரசின் சிபிஎஸ்இ பிரிவு பள்ளி பாடபுத்தகங்களான என்சிஇஆர்டி புத்தகங்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டடிருந்தது. போலீசார் விசாரணையில் ரூ.35 கோடி மதிப்புள்ள போலி என்சிஇஆர்டி புத்தகங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சிட்டது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரபடுத்தினர்.
இந்நிலையில், உத்தரபிரதேச பாஜக தலைவர் சஞ்சீவ் குப்தாவின் மகன் சச்சின் குப்தா மீது தான் போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சிட்டுள்ளார் என தெரியவர அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சச்சின் குப்தா தலைமறைவாக உள்ள நிலையில், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அச்சிடும் இயந்திரங்களை மீரட் மாவட்ட ஊழல் தடுப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.