புதுதில்லி:
ஊனமுற்ற வீரர்களுக்கு அளிக்கப் படும் ஓய்வூதியத்திற்கு வருமான வரிவசூலிக்கும் நடவடிக்கைக்கு, இந்தியராணுவ வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.ராணுவ வீரர்கள், தங்களின் பணியின்போது காயமடைவதால், உடல் ஊனமுறுகின்றனர். கடந்த 1971-இல்நடந்த போரின்போது, மேஜர் ஜெனரல் கார்டோசோ, இளைஞராக இருந்தார். அவர் கண்ணிவெடி ஒன்றைசெயலிழக்கச் செய்யும் முயற்சியில் காயமடைந்து, தனது காலை இழந்தார்.அதன்பிறகும் அவர் பணியைத் தொடர்ந்தார்.
அண்மையில் அவர் ஓய்வுபெறும் போது, கார்டோசோவின் சேவைகளை, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. இதேபோலவே ஊனமுற்ற ராணுவவீரர்கள் ஏராளமானோரின் ஓய்வூதியத்திலும் மோடி அரசு கைவைத்தது. இதற்கு மோடியின் முதல் ஆட்சிக் காலத்திலேயே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் மோடி அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், இந்திய ராணுவமேதனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஊனமுற்ற வீரர்களின் ஓய்வூதியத்தில் வரிப் பிடித்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.“பல ஆண்டுகளாக, நாட்டின் பாதுகாப்புக்காக உழைத்து, ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையில், வரிப்பிடித்தம் செய்வது தவறானது. இதனை ரத்து செய்ய வேண்டும். இது ஊனமுற்ற வீரர்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமை என்பதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு உதவுவதும் ஆகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் வருமான வரி விலக்கு பெற்ற ஓய்வூதியமாக மாற்றப்படுவதற்கு இந்திய ராணுவம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ஓய்வூதியத்திற்கு வரிப் பிடித்தம்செய்வதை எதிர்க்கிறது.” என்று ட்விட்டர் பக்கத்தில் ராணுவம் குறிப் பிட்டுள்ளது.