புதுதில்லி:
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, நடப்பாண்டில் 6 சதவிகிதம் வரைவீழ்ச்சி கண்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் மற்றும்மோசமான ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றால், இந்தியப் பொருளாதாரம், கடந்த சில ஆண்டுகளாகவே கடும் சரிவைச் சந்தித்துவந்தது. இந்நிலையில், கொரோனாமுடக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.இதனால், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, ஏற்றமும் இறக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2 வர்த்தக நாட்களில் மட்டும்33 பைசா வீழ்ச்சி கண்டு, செவ்வாயன்று காலை 75 ரூபாய் 88 காசுகளாக சரிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தக வாரத்தின் இறுதி நாளில்,அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 75 ரூபாய்55 காசுகளாக இருந்தது. பின்னர் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று மேலும் 19 காசுகள்சரிந்து, 75 ரூபாய் 74 காசுகளுக்கு இறங்கியது. இதுவே செவ்வாய்க் கிழமையன்று வர்த்தக நேரத்தில் மேலும் 14 காசுகள் சரிந்து, 75 ரூபாய்88 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், இந்திய அரசுகடனை அதிகரிக்க முடிவு செய் துள்ளது. 2021 மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டில், 7.8 டிரில்லியன் டாலர்களை பல்வேறு வகையில் கடனாக திரட்டுவது என்று பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. அதனை தற்போது 12 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
இந்த செய்திகள், தற்போதுரூபாய் மதிப்பை இறக்கத்திலிருந்து தற்போது காப்பாற்றத் துவங்கியுள்ளதாக சந்தை வல்லுநர்களின் கூறுகின்றனர். எனினும் நடப்பு 2019-20 நிதியாண்டில்மட்டும் ரூபாயின் மதிப்பு 6 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.