tamilnadu

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார்மயமாக்கக் கூடாது

புதுதில்லி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்றும், அதன்மூலம் மக்கள்மத்தியில் தங்கள் சேமிப்புகள் குறித்து எழுந்துள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும்என்றும் அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர்சங்கத்தின் தலைவர் ஆர். முகுந்தன் மற்றும் பொதுச்செயலாளர் எஸ்.சி.பாலாஜி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் நிதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான அரசு அதிகாரிகள் சிலரும் ‘நிட்டி ஆயோக்’ அளித்திட்ட பரிந்துரைகளின்படி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி விட்டதாகவும்கூட அவை தெரிவிக்கின்றன.சென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாட்டு மக்களின் ரத்தமும் சதையுமாக அவர்களுடன் பின்னிப்பிணைந்துள்ள ஒரு வங்கியாகும். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் உட்பட 1,200க்கும் மேற்பட்ட கிளைகளுடன் அது மக்களுக்கு சேவை செய்து வருகிறது.பொதுவாக வங்கிகளுக்கு இருக்கின்றசெயல்படா சொத்துக்கள் (வராக்கடன் கள்) மற்றும் மூலதனக் கட்டுப்பாடுகள் போன்றபிரச்சனைகள் இருந்தபோதிலும்,  இந்தியன்ஓவர்சீஸ் வங்கி, 4 கோடி வாடிக்கையாளர் களுக்கும் மேலானவர்களைப் பெற்று மக்களின் நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் ஒருவங்கியாகும். எங்கள் வங்கியின் சேவை மக்களுக்கு 83 ஆண்டுகளுக்கும் மேலானதும். இதன் கிளைகளில் 57 சதவீதம் கிராமப்புற மற்றும் அரை நகர மையங்களில் வாழும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. இதன் கீழ் 26 ஆயிரம் ஊழியர்களும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக முகவர்களும் செயல்பட்டு மிகவும் விரிவான அளவில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

இந்திய ஓவர்சீஸ் வங்கி, மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள பிரதமர் ஜன்தன் திட்டம், முத்ரா, கிசான் கார்டுகள், முறைசாராத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (அடல் யோஜனா) போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒரு முன்னோடிவங்கியாகவும் செயல்பட்டுக்கொண்டிருக் கிறது. கிராமப்புறங்களில் ஆடம்பரம் எதுவுமின்றி விவசாயத்திற்கும், சிறிய மற்றும்நடுத்தரத் தொழில்பிரிவினருக்கும் சேவை செய்துவரும் எங்கள் வலிமையும் தொடர்கிறது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார்மயப்படுத்தினால், கிராமப்புற மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இது, இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கத்தையே தோல்வி யுறச் செய்துவிடும்.நாட்டின் வரலாற்றில் வங்கித் துறையில் தனியார் வங்கிகள் தோல்வியடைந்தது குறித்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பாரதஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து வங்கி களும் 1947க்கும் 1969க்கும் இடையே தனியார்வங்கிகளாக இருந்தவைதான். இந்தியாவில் 559 தனியார் வங்கிகள் தோல்வி அடைந்திருக்கின்றன. வங்கிகளில் அரசாங்கத்திற்கு இருந்துவரும் பிடியைத் தளர்த்துவது என்பது,நாட்டின் பொருளாதார நிலைமையை எளிதாகத் தவிடுபொடியாக்கிவிடும். வாடிக்கை யாளர்களும் வங்கி சேவையை மலிவான கட்டணங்களுடன் பெறுவது என்பதும் இல்லாத தாகிவிடும்.நாடே கோவிட்-19 கொரோனா வைரஸ்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில்,இவ்வாறு வங்கிகளைத் தனியார்மயப் படுத்துவதாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள், வங்கி ஊழியர்களுக்கும், வங்கி வாடிக்கையாளர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டதைவிட  பயங்கர அதிர்ச்சியை அளித்துள்ளது.    

ஊடகங்களில் வந்துள்ள ஊகங்களைத் தாங்கள் பொய்ப்பித்திட வேண்டும் என்றும் அதன்மூலம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்னும் அடையாளத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்றும்கேட்டுக் கொள்கிறோம்.மக்கள் மத்தியில் தங்கள் சேமிப்புப் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது என்று கூறி அவர்களின் அச்சஉணர்வினைப் போக்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள் கிறோம்.இவ்வாறு ஆர்.முகுந்தனும், எஸ்.சி.பாலாஜியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்கள். (ந.நி.)