tamilnadu

img

வரலாறு காணாத பாதிப்பில் இந்திய பொருளாதாரம்...

புதுதில்லி:
இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாகவும், 2020ஆம் ஆண்டில் 4.5 சதவிகிதம் அளவிற்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றும், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund - IMF)எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

“2020-ஆம் ஆண்டில் 4.5 சதவிகிதம் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியுடன் இருக்கும் என்றுநாங்கள் அறிந்துள்ளோம். இந்தியாவில் நீண்டகாலமாக லாக்-டவுன் நடைமுறையை பின்பற்றுவது மற்றும் ஏப்ரலில் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பொருளாதார வளர்ச்சி இருப்பது ஆகியவையே இந்த பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம்” என்றும் ஐஎம்எப் தெளிவுபடுத்தியுள்ளது.4.5 சதவிகித பொருளாதார வீழ்ச்சியானது, 1961-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஐஎம்எப் கணித் துள்ள, இந்தியா தொடர்பான மிகக்மோசமான பொருளாதார வளர்ச்சிமதிப்பீடு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, சாதகமான வளர்ச்சியைத் திருப்பக்கூடிய ஆற்றல் கொண்ட இரண்டு வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாகஇருந்தது. தற்போது அந்த இடத்தைஇந்தியா இழந்துள்ளதாக கூறும்ஐஎம்எப், ஆனால், ஆச்சரியப்படத் தக்க வகையில், சீனா ஏப்ரல் மாதத்தில் அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறந்த பின்னர், இந்த நிதியாண்டில் 1 சதவிகிதம் மற்றும் அடுத்த ஆண்டில் 8.2 சதவிகிதம் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது

“2021-இல் இந்தியப் பொருளாதாரம் மறுபடி ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும், 6 சதவிகிதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் உயரும்” என்றும் ஐஎம்எப்ஒரு சின்ன ஆறுதலை இந்தியர் களுக்கு அளித்துள்ளது.2020 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியையும் 4.9 சதவிகிதம் என்று குறைத் துள்ள ஐஎம்எப்,  2020 ஆம் ஆண்டில், சீனாவைத் தவிர்த்து, மற்றஅனைத்து நாடுகளும் முதன்முறையாக சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின் படி எதிர்மறையான வளர்ச்சியையே காணும் என்று குறிப்பிட்டுள்ளது.இன்னும் குறிப்பாக, உலக நாடுகளின் உண்மையான வளர்ச்சி - வீழ்ச்சி கணிப்புகள், வழக்கத்தை விட அதிகமாக, கடுமையானதாக, கணிக்க முடியாததாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.