tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை கைவிட அமைச்சரிடம்.... திமுக வலியுறுத்தல்

சென்னை:
புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் திமுக தரப்பில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை  சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, புதிய கல்விக் கொள்கையை கைவிடுதல் தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார்.அந்த கடிதத்தில், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு குறித்து தேசிய கல்விக் கொள்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் அல்லது அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.