புதுதில்லி,மார்ச் 15- கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ் தான் எல்லை ஞாயிறன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயை பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை ஞாயிறன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசம், பூடான், நேபா ளம், மியான்மர் ஆகிய நாடுகளு க்குச் செல்லும் சாலை வழிகள் சனிக்கிழமையன்று மூடப்பட்டன. எல்லை பகுதியில் அமைந்துள்ள அசாம், பீகார், மேகாலயா, மிசோரம், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.