புதுதில்லி:
மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிஅமலாக்கம், கடந்த 4 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாக சீரழித்து விட்டது. தற்போது கொரோனா பாதிப் பும் சேர்ந்து கொண்டதால், நிலைமைஇன்னும் மோசமாகி உள்ளது. குறிப்பாக, 2020 ஏப்ரல் மாதத் துக்கான இந்தியாவின் வணிக ஏற்றுமதி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது, கொரோனா விளைவாக இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த 30 துறைகளில் 28 துறைகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 10.36 பில்லியன் டாலர் அளவிற்கே2020 ஏப்ரலில் இந்தியாவின் ஏற்று
மதி மதிப்பு இருந்துள்ளது. இது 2019 ஏப்ரல் மாத ஏற்றுமதியை விட 60.28 சதவிகிதம் குறைவாகும்.
1995-ஆம் ஆண்டுக்குப் பிறகுஏற்பட்ட மிகப்பெரிய ஏற்றுமதி வீழ்ச்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.மருந்து மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதி மட்டுமே இந்தக் காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளன. இறக்குமதியிலும் இதே நிலையே ஏற்பட்டுள்ளது.30 துறைகளில் ஒரு துறை கூட வளர்ச்சி காணவில்லை. 2020 ஏப்ரல் மாதத்தில் 17.12 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. 2019 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் இறக்குமதியும் 58.65 சதவிகிதம் குறைந்துள்ளது.தற்போது ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டிருந்தாலும், ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் மற்றும் ஒப்புதல்களைப் பெறுவதில் நிறுவனங்கள் சிக்கல்களைச் சந்தித்து வருவதால் இன்னும் ஏற்றுமதிப் பணிகள் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. இதனால் மே மாதத்திலும் நிலைமை மேம்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் நடந்துள்ளஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைந்ததுதான். இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2019 ஏப்ரலில் 15.33 பில்லியன் டாலராக இருந்தது. 2020 ஏப்ரலில் இது 6.76 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறது.