tamilnadu

img

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி ஊடுருவல் இல்லையெனில் சண்டை எதற்காக நடந்தது?

புதுதில்லி:
எல்லையில் சீனா ஊடுருவவில்லை; இந்தியாவின் பகுதியைஆக்கிரமிக்கவும் இல்லை; நமது வீரர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்று அனைத்துக் கட்சிகூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், டுவிட்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“இந்திய மண்ணில் எந்த வெளிநாட்டினரும் (சீனா) ஊடுருவவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியது உண்மையெனில் மே 5- 6 -ஆம் தேதிகளில் சீனாதேவையில்லாமல் வம்பு வளர்த்தது ஏன்? அன்றைய தினம் நடந்தபேச்சுவார்த்தையில் என்ன பேசப் பட்டது? ஜூன் 16 -17 தேதிகளில் துருப்புகளிடையே சண்டை நிகழ்ந்தது ஏன், இந்தியாவில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தது ஏன்? எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த ஊடுருவலும் அத்துமீறலும் நடக்கவில்லை எனில்இரு தரப்பினரும் எல்லையில் குவித்த படைகளை திரும்பப் பெற பேச்சுவார்த்தை நடந்ததுஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைஎழுப்பியுள்ளார். இதனிடையே, சீனா ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்துவிட்டார்கள் என்ற அர்த்தத்திலேயேபிரதமர் பேசியதாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.