புதுதில்லி:
கடந்த ஐந்தரை ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ‘ஜிடிபி’ 4.5 சதவிகிதம் என்ற படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. இது மேலும்சரியும் என்று பொருளாதார நிபுணர்கள்எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.மறுபுறத்தில் ஜிடிபி 4.5 சதவிகிதம் என்பதேகூட பொய் என்றும், உண் மையில் அது 1.5 சதவிகிதத்தைத் தாண்ட வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார், பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி.
இந்த தரவுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகின்றன. தற்போது அது பாஜக அரசுக்கு நெருக்கடியாகவும் மாறியுள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை தாங்க முடியாத ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா தொகுதி எம்.பி.நிஷிகாந்த் துபே, “ஜிடிபி ஒன்றும்புனித நூல் அல்ல; அதனால் பொருளாதாரத்திற்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை” என்று பினாத்தியுள்ளார்.“1934-இல்தான் ஜிடிபி அளவீடே வந்தது. அதற்கு முன்பாக ஜிடிபி என்றஒன்று இல்லவே இல்லை; அப்படியிருக்கையில், ஜிடிபியை பைபிள்,ராமாயணம், மகாபாரதம் போன்றபுனித நூல் போல, நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. எதிர்காலத்திலும்கூட, நாட்டின் பொருளாதாரத்தை கணிப்பதில் ஜிடிபி பயன்படாது; அதனைவிட நாட்டு மக்களின் மகிழ்ச்சிதான் முக்கியமானது” என்று திடீரெனபொருளாதார மேதையாக மாறியுள்ளார்.பாஜக எம்.பி.யின் இந்த பேச்சுக்கு,மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். “இனி இந்திய பொருளாதாரத்தைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.