புதுதில்லி, ஏப்.18- பிரதமர் நரேந்திர மோடி,ஒடிசா மாநிலத்தில் தேர்தல்பரப்புரைக்குச் சென்ற போது, அவரது ஹெலிகாப் டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை செய்துள்ளனர். பிரதமரின் சிறப்புப் பாதுகாவலர்கள் தடுத்தும்கூட, அதிகாரிகள் மிகுந்த உறுதியுடன் மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்டதாக கூறப் படுகிறது.இந்நிலையில், மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிடுவதற்கு உத்தரவு பிறப்பித்த ஐஏஎஸ் அதிகாரி முகம்மது மொஹ்சினை, தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடிஅளித்த புகாரின் பேரில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுஇருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்புப் பாதுகாப்புப் படை பிரிவைப் பெற்றுள்ளவர்களுக்கு இதுபோன்ற சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. முகம்மது மொஹ்சின் அந்த விதிமுறையை மீறி சோதனை நடத்தி விட்டார் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.