மதுரா:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்களைக் கொல்வதையோ, பசுக் களைத் துன்புறுத்துவதையோ பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று பாஜக முதல்வர்ஆதித்ய நாத் ஆவேசப்பட்டுள்ளார்.
விழா ஒன்றில், இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:“கிருஷ்ண பகவான் பசுக்களுக்கு சேவை செய்துள்ளார், போஷித்துள்ளார். இத்த கைய புனிதமான பசுக்கள் கொல்லப் படுவதை அனுமதிக்கவே முடியாது. அதனைத் துன்புறுத்து வதையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.அதனால்தான், தெருவில் சுற்றித்திரியும் பசுக்களைப் பாதுகாத்து பராமரிக்க மாநில அரசு பசுஒன்றிற்கு மாதாமாதம் ரூ. 900அளிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பசு உள்ளிட்ட கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்க மருந்துகளும் நோய்த் தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் பசுக்கள் காது-குறியிடலுக்கு உட்படுத்தப்படு கின்றன. இதனால் எந்த கால்நடைமருந்து பெறவில்லை என்பதை கண்டுபிடிப்பது எளிதாக இருக் கிறது. கிருஷ்ணரும் ராதாவும் இந்த பிரஜ் பிராந்தியத்தில்தான் தோன்றினர். இதன்காரணமாக உலகம் முழுமையுமே அதன் புனிதத்தை உணர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆதித்யநாத் பேசியுள்ளார்.