புதுதில்லி:
கொரோனா சிகிச்சை அளிக்கும்மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என்றும்மருத்துவமனைகளில் குறைகளை களைய நிபுணர் குழு பார்வையிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நோயாளி களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்று புகார்கள் எழுந்தன.இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல் மற்றும்அடக்கம் செய்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது தில்லி மாநிலத்திற்கு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உள்ள குறைகளை களைய நிபுணர்குழு பார்வையிட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு நாடு முழுவதும் நியாயமான ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுவதில் உள்ள குறைகளை களையவேண்டும் என்று உத்தரவிட் டுள்ளது.