tamilnadu

img

ஜனநாயகத்திலிருந்து தூர விலகிப் போகும் இந்தியா.... ‘பிரீடம் ஹவுஸ்’ நிறுவன ஆய்வறிக்கை எச்சரிக்கை

புதுதில்லி:

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில், இந்தியா ஜனநாயகத்திலிருந்து தூர விலகிப் போய்க் கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘ஃபிரீடம்ஹவுஸ்’ (Freedom House) எனும்அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.‘பிரீடம் ஹவுஸ் ’ அமைப்பானது, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய அரசியல் மற்றும் உள்நாட்டு உரிமைகளை கண்காணித்து, அதனடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

1948ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் வழிமுறைகளை பின்பற்றி, உலக நாடுகளின் அரசியல் உரிமைகளான, தேர்தல் செயல்முறை, அரசியல் பன்மைவாதம், அரசாங்க செயல்பாடுகள் மற்றும் உள்நாட்டு உரிமைகளான கருத்துச் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, தனிப் பட்ட உரிமைகளை அடிப்படையாக கொண்டு, ‘பிரீடம் ஹவுஸ்’ இந்தஅறிக்கையை தயாரிக்கிறது.அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான உலக மக்களின் சுதந்திரம் குறித்த (The Freedom in the World2020) அறிக்கையை ‘ஃபிரீடம் ஹவுஸ்’ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், அரசியல் உரிமைகள் வகையில் 40-க்கு 34 புள்ளிகளும், உள்நாட்டு உரிமைகள் வகையில் 60-க்கு 37 புள்ளிகளும் எனமொத்தம் 71 புள்ளிகளே இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது கடந்தஆண்டை விட 4 புள்ளிகள் குறைவாகும். மேலும் துனிசியா, செனகல் உள்ளிட்ட குறைவான புள்ளிகளை பெற்ற நாடுகளுடன் இணைந்து 83-ஆவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.இந்தியாவின் இந்த பின்னடைவுக்கு, காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, வெகுஜன ஆர்ப் பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்டவையே காரணம் என்று ‘பிரீடம் ஹவுஸ்’ கூறியுள்ளது.“இந்த புதிய காரணிகள், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை அசைத்து பார்ப்பதுடன், அதன் அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன; இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குஉள்ளாகியுள்ளது, ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும்பலர் அரசியல் ரீதியாக முக்கியமாகஇயங்குபவர்கள் துன்புறுத்தல் களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்” என்று குறிப் பிட்டுள்ளது.

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான பொதுத்தேர் தலை கடந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், நாட்டின் அடிப்படை உறுதிப் பாடான பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகளில் இருந்து பாஜகதன்னைத் தூர விலக்கிக் கொண்டுள்ளது. பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகள் இல்லாமல் ஜனநாயகம் நீண்ட காலம் வாழ முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.