tamilnadu

பீகார் முன்னாள் முதல்வர்  ஜெகநாத் மிஸ்ரா மறைவு

 புதுதில்லி, ஆக.19- பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா(82), கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், திங்களன்று காலமானார். ஜெகநாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14-வது முதல்வர் ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு தற்போதைய பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.