பீகாரில் 12 ஆயிரத்து 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நிதிஷ்குமார் அரசு பரிசோதனை மற்றும் சிகிச்சைகளில் ஆர்வம் காட்டாமல், சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி விமர்சித்துள்ளார்.