ஸ்ரீநகர்
நாட்டின் வடபகுதி எல்லையில் உள்ள யூனியன் பிரதேச மாநிலமான ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த 3 மாத காலமாக தீவிரவாதிகள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவமும் அடிக்கடி அடிக்கடி ஊடுருவதால் எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கணிக்கணிப்பில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஜம்மு சோபியான் சுகோ பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் மறைவாக இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுக்க 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக சோபியான் சுகோ பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.