புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையாக, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு, தில்லி உயர் நீதிமன்றத்தில் உருக்கமான பிரியாவிடை கொடுக்கப்பட்டுள்ளது.
வியாழனன்று கடைசியாக சொத்து வழக்கு ஒன்றில் நீதிபதி முரளிதர், தீர்ப்பு வழங்கினார். இதன்பின் வெளியே வந்த அவரிடம் நீதிமன்ற பணியாளர் ஒருவர் பணியிட மாறுதல் கடிதத்தை அளித்தார். இதையடுத்து அங்கிருந்த இளம் வழக்கறிஞர்கள் பலர் நீதிபதி முரளிதரைக் கட்டியணைத்து, பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வீடியோவை துணிச்சலாக ஒளிபரப்பியது குறித்தும் நீங்கள் எங்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டு பாராட்டினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட நீதிபதி முரளிதர், தில்லி உயர் நீதிமன்றத்திலிருந்து விடைபெற்றார்.