tamilnadu

img

அண்டை நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி டி.கே.ரங்கராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
அண்டை நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கேட்டிருந்த கேள்வியின்மீது அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் கேள்விநேரத்தின்போது, டி.கே. ரங்கராஜன், இந்தியா, அண்டை நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்கிறதா ஆம் எனில் அதன் அளவு மற்றும் அதன் ரூபாய் மதிப்பு என்ன என்று கேட்டிருந்தார்.இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், கூறியதாவது:மின்சாரம் நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூட்டான் இந்தியாவுக்கு இறக்குமதி செய்கிறது. சில சமயங்களில் மட்டும் நம்மிடமிருந்து பெற்றுக் கொள்கிறது.2018-19ஆம் ஆண்டில் மின்சாரம் நேபாளம், வங்க தேசம் மற்றும் மியான்மருக்கு முறையே  2798.84 மில்லியன் யூனிட்டுகள், 5690.31 மில்லியன் யூனிட்டுகள், 6.61 மில்லியன் யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பூடான் 4657.07 மில்லியன் யூனிட் அளித்திருக்கிறது.   மின்சாரம் வாங்குதல் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் மின்சாரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. (ந.நி.)