புதுதில்லி:
பாடத்திட்டங்களில் குடி யுரிமை, மதச்சார்பின்மை போன்றவற்றை நீக்குவது மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.10 முதல் 12 ஆம் வகுப்புவரையிலும் பாடப் புத்தகங்களில் குடியுரிமை, தேசிய வாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வரும் அடிப்படை அம்சங்கள் முதலானவற்றை பாடத் திட்டத்திலிருந்து நீக்குவது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எடுத்திருக்கிற முடிவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டி த்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றையும், சமூக முடக்கத்தையும் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு, மாணவர்களின் பாடத்திட்டத்தைக் குறைக்கி றோம் என்ற பெயரில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஒருதலைப்பட்சமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறது.இவ்வாறு மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை அரித்து வீழ்த்திடும் விதத்தில் பாடத்திட்டங்களை மிகவும் உன்னிப்பாகத் தேர்வுசெய்து நீக்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கடுமையாக நிராகரிக்கிறது. இந்த அத்தியாயங்களை நீக்குவதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் பகுத்தறிவுடன் கூடிய எவ்விதமான பதிலையும் அளிக்கமுடியவில்லை. வாரியத்தின் இம்முடிவு இரண்டக மானது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இந்த முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரு கிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை அரித்து வீழ்த்திட மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)