சண்டிகர்
நாட்டின் வடக்குப் பகுதி மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் உள்ள சம்பா மாவட்ட பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பானது என்றாலும் ஹிமாச்சல் பகுதியில் ஒரே வாரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த புதன்கிழமையும் இதே சம்பா மாவட்ட பகுதியிலும், நேற்று குலு மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.