புதுச்சேரி,ஜூன் 17- கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழு வதும் மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களும் திங்களன்று (ஜூன்-17) பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தங்களுக்கு மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடு முழுக்க மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அவசர சிகிச்சை பிரிவிற்கு உள்ளேயே போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டம் செவ்வாய்கிழமை காலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதேப்போல் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒரு மணி நேரம் மருத்து வர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.