tamilnadu

img

முஸ்லிம் கல்லறைகள் மீது அமைகிறதா, ராமர் கோயில்? 9 இஸ்லாமியக் குடும்பங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு கடிதம்

அயோத்தி:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப் பட உள்ளது. உச்ச நீதிமன்றம் இதற்கு அனுமதியளித்து விட்டது. மத்திய அரசும் ராமர் கோயில் கட்டுவதற்கென ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை நிறுவி 15 உறுப்பினர்களை நியமித்துள்ளது. கட்டுமானத்திற்கான நன்கொடை வசூலும் துவங்கி விட்டது.

இந்நிலையில், பாபர் மசூதியின் ஒருபகுதியில் முஸ்லிம்களின் அடக்க ஸ்தலம் (கல்லறை) இருக்கும் நிலையில், அந்த அடக்கஸ்தலத்தையும் உள்ளடக்கித்தான் ராமர் கோயில் நிர்மாணிக் கப்படுகிறதா? என்ற சர்ச்சை எழுந்துள் ளது.இதுதொடர்பாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு, அயோத்தியில் வசிக்கும் 9 இஸ்லாமியக் குடும்பங்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷத், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், “புதிதாக கட்டப்பட இருக்கும்ராமர் கோவிலை, பாபர் மசூதிக்கு அருகே 5 ஏக்கரில் இருந்த கல்லறையோடு சேர்த்து கட்டி விட வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.நான்கு பக்கங்களில் எழுதப் பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:“1994-ஆம் ஆண்டு 1480 சதுர மீட்டர்அளவிலான மசூதி நிலத்தை மட்டுமல்லாது, மசூதி அருகே சுமார் 4 முதல் 5 ஏக்கரில் இருந்த இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் உள்பட 67 ஏக்கர் மொத்த நிலத்தையும் மத்திய அரசு தன்னிச்சையாக கையகப்படுத்தியது. பொதுமக்களின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இந்தநிலப்பகுதி உள்ளது என்று அப்போது மத்திய அரசு காரணம் கூறியது. உச்சநீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டது.1949-ஆம் ஆண்டு ராமர் சிலை வேண்டுமென்றே உள்ளே கொண்டு வந்து வைக்கப்பட்ட பின்பும், 1992-ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்ட பின்பும் 5 ஏக்கரில் இருந்த கல்லறைகள், இன்றைய சூழ்நிலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்படலாம்.

ஆனால், 1962-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘பாபர் மசூதி நான்கு பக்கமும் கல்லறையால் சூழப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாசியாபாத் அரசு ஆவணம், ‘75 முஸ்லிம்களின் கல்லறை இருந்த அந்த ஐந்து ஏக்கர் நிலம் ‘கஞ்ச் ஷாஹிதான்’ என அறியப்பட்டது’ என்றுகுறிப்பிடுகிறது.கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கல்லறைகள் இருப்பதை, ‘1855-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போதுகொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் 75 பேரின் உடல்கள் இங்கு புதைக்கப் பட்டுள்ளன’ என்று ஸ்ரீராம் லல்லா விரஜ்மான் அமைப்பும், அதன் வழக்கு எண் 3-ல், குறிப்பிட்டுள்ளது.அதுமட்டுமல்ல, அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே, ‘சர்ச்சைக்குரிய இடத்தின் மூன்று பக்கங்களும் கல்லறையால் மூடப் பட்டுள்ளன’ என்று நீதிபதி டி.வி. ஷர்மாஉறுதிப்படுத்தியுள்ளார்.எனவே, இந்து சனாதான முறையில் இருக்கும் அனுபவத்தையும், அறிவையும் கொண்டு, ‘ராமர் கோவில் இஸ்லாமியர்களின் கல்லறையின் மேல்தான் கட்டிஎழுப்பப்படுமா?’ என்பதை கொஞ்சம் யோசனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”இவ்வாறு வழக்கறிஞர் எம் .ஆர். ஷம்ஷத், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.