புதுதில்லி:
அயோத்தியில் பாபர் மசூதி இருந்தஇடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனுதாக்கல் செய்யப் போவதாக அகில இந்தியமுஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் (AIMPLB) அறிவித்துள்ள நிலையில், அது சரியான நிலைக்பாடாக இருக்காது என்று புகழ்பெற்ற முஸ்லிம் அறிஞர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள் என 91 பேர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான இந்திய முஸ்லிம்களின் அறிக்கை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“மூன்று தசாப்தங்களாக பழமையான ராம்ஜன்மபூமி - பாபர் மஸ்ஜித் தகராறின் போதுபெறப்பட்டவை மற்றும் இழந்தவை குறித்து சக முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு, சட்டரீதியாக குறைபாடு (Judicially flawed) உள்ளதாக இருப்பினும், போராட்டத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதனால் பாதிக்கப்படப்போவது ஏழை முஸ்லிம்கள்தான். இதற்கான விலையை அவர்கள்தான் அனுபவிப்பார்கள்.சக முஸ்லிம்களுக்கான எங்களின் வேண்டுகோள், மந்திர்-மஸ்ஜித் தகராறில் இருந்து ‘விலகிச் செல்ல வேண்டும்’ என்பதேயாகும். நமது மதச்சார்பற்ற-ஜனநாயக குடியரசை ஒருஇந்து சாம்ராஜ்யமாக மாற்றும் சங்க பரிவாரின் உண்மையான அஜெண்டாவுக்கு (agenda) நமது நடவடிக்கைகள் உதவி செய்வதாக அமைந்துவிடக் கூடாது.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நடிகர்கள் நசீருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, பத்திரிகையாளரும் மனித உரிமைஆர்வலருமான ஜாவேத் ஆனந்த், திரைப்படஎழுத்தாளர் ஜாவேத் சித்திகி, திரைப்பட தயாரிப்பாளர் ஷாமா ஜைதி, சென்னையை சேர்ந்தவழக்கறிஞர் ஏ.ஜே. ஜாவத் மற்றும் இஸ்லாமிய அறிஞர் ஜீனத் ஷாகத் அலி உள்ளிட்டோர் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.