பிரதமர் அறிவிப்பு
புதுதில்லி, ஏப்.14- பிரதமர் மோடி ஏப்ரல் 14 செவ்வாயன்று காலை 10 மணியளவில் நாட்டு மக்களிடையே உரை யாற்றினார். அவர் பேசும்பொழுது, மே 3ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளி யிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கொரோனா பரவலை தடுக்க நீட்டிப்பு அவசியம் ஆகி யுள்ளது. நிறுவனங்கள் பணியில் உள்ள ஊழி யர்களை நீக்கம் செய்ய வேண்டாம். பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு முக கவசம் அணிவது கட்டாயம். வீட்டில் கூட முகமூடி அணியுங்கள். கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டும் என 7 கடமைகளை மக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்கள். முதியோர்களை பாது காப்பாக பார்த்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசும்பொழுது, நம் நாட்டை பிற நாடுகளோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. ராணுவ வீரர்களை போல நீங்கள் நாட்டுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் வலிமையை நிலைநாட்டுவது, அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும். நிறைய பண்டிகைகளை கொண்டாட முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய வேத னையை நான் உணருகிறேன். நாடு முழுவதும் நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளை யும் இந்தியா தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ளது. இதற்கு சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது எனவும் கூறினார்.