tamilnadu

img

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்

புதுதில்லி:
சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்துத்துவா அரசியலுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் எதிராக சமரசமற்றமுறையில் போராடியவர் அவர் என்றும், சமூக நல்லிணக்கத்திற்காக நின்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.சமூக செயல்பாட்டாளரும், அறிஞரும், அரசியல்வாதியும் ஆரியசமாஜ் தலைவருமான சுவாமி அக்னிவேஷ், புதுதில்லியில் வெள்ளியன்று காலமானார். 80வயதான அக்னிவேஷ் வெள்ளியன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி6.30 மணியளவில் காலமானார்.

சுவாமி அக்னிவேஷ் ஹரியானா மாநிலத்தில் சட்டமன்றஉறுப்பினராக இருந்தவர். கொத்தடிமைத் தொழிலாளர்களின் நலனுக்காக கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற அமைப்பின்மூலமாக செயல்பட்டவர். தில்லியைச்சுற்றியுள்ள குவாரிகளில் பணியாற்றிய கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவித்திடும் போராட்டத்தில் இந்த அமைப்புஈடுபட்டு வந்தது.ஆந்திராவில் பிறந்த சுவாமி அக்னிவேஷ், ஹரியானா மாநிலத்தில் 1977இல் கல்வி அமைச்சராக இருந்தார். எனினும்அம்மாநிலத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

து.ராஜா, மு.க.ஸ்டாலின் இரங்கல்
அக்னிவேஷ் ஒட்டுமொத்த  இடதுசாரி இயக்கத்திற்கும்மாபெரும் நண்பர். அவரை நான் தோழர் ஸ்வாமி என்றுதான் அழைப்பேன். அவர் தன்னை ஏழைகளுக்காகப் போராடும் முற்போக்கு சக்திகளுடன் அடையாளப்படுத்திக்கொள் வதற்கு எப்போதுமே தயங்கியது இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா கூறினார்.  மதவெறி சக்திகளால் பல தடவைகள் தாக்குதல்களுக்கு ஆளான போதிலும், தன் கொள்கைகளில் உறுதியாக இருந்தார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.(ந.நி.)