புதுதில்லி:
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தனி விமானத்துக்கு ஆன செலவு மட்டும் ரூ. 446 கோடியே 52 லட்சம்என்று மத்திய அரசு தெரி வித்துள்ளது.2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவி யேற்றதில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். 4 ஆண்டுகளிலேயே 84 நாடுகளைச் சுற்றி வந்தார்.இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தனி விமானத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.இதற்கு மத்தியவெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் பதிலளித்துள்ளார்.அதில், பிரதமரின் வெளிநாட்டுபயணத்துக்கான தனி விமானத் திற்கு செலவிடப்பட்ட தொகை மட்டும் ரூ. 446 கோடியே 52 லட்சம் என்று தெரிவித்துள்ளார். 2015-16ஆம் ஆண்டில் ரூ. 121 கோடியே 85 லட்சம், 2016-17-இல் ரூ. 78 கோடியே 52 லட்சம், 2017-18 ஆம் ஆண்டில்ரூ. 99 கோடியே 90 லட்சம், 2018-19இல் ரூ. 100 கோடியே 2 லட்சம், 2019-20இல் ரூ. 46 கோடியே 23 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது என புள்ளி விவரங்களையும் அளித்துள்ளார்.