tamilnadu

img

“கார்ப்பரேட் வரிக் குறைப்பால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை!”

புதுதில்லி:
பணத்தை வைத்துக் கொண்டு, ஆனால், முதலீடு செய்வதற்கு முன்வராத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, அரசாங்கம் மேலும் மேலும் வரியைக் குறைப்பதால், எந்த பலனும் இல்லை என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றஅறிஞர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.மத்திய பாஜக அரசானது, பொருளாதார மந்த நிலையைச் சரி செய்கிறோம்என்று கூறி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதம் வரை குறைத்தது. இதுதொடர்பாக கேள்விகள் எழுந்தபோது, பணப்புழக்கத்தை அதிகரிக்கவே இவ் வாறு செய்கிறோம் என்று காரணம் கூறினர். ஆனால், வழக்கம்போல வரிச்சலுகையை மட்டும் அனுபவித்துக் கொண்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய முதலீடு எதையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையிலேயே, கார்ப்பரேட் வரியை குறைப்பதால் எந்தப் பலனும் இல்லைஎன்று பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:மக்களிடம் நுகர்வு குறைந்து இருப்பதே தற்போதைய பிரச்சனை. மக்களிடம்போதியப் பணப்புழக்கமும் இல்லை. அவர்களிடம் பணப்புழக்கம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள். கார்ப்பரேட்டுகளிடம் பணம் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் முதலீடுசெய்வதற்கு தயாராக இல்லை. எனவே,அவர்களுக்கான வரியை குறைத்ததுசரியான தீர்வு அல்ல. ஏனென்றால் மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும்பட்சத்தில் நிறுவனங்கள் தானாகவே முதலீடுகளை மேற்கொள்ளும். மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் நுகர்வுத் திறன் கடந்த50 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. விளைவாக நிறுவனங்களின் உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள் ளது. 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி தொடர்ந்து நான்கு மாதங்களாக எதிர் நிலையில் - அதாவது மைனஸில் (-) உள்ளன. இந்நிலையில் கார்ப்பரேட் வரியைக் குறைப்பதைக் காட்டிலும் மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும்.அரசு, அதன் மக்களை தன்மானத் தோடு வாழ வழி செய்ய வேண்டும். அதுஅரசின் அடிப்படையான தார்மிகக் கடமை.பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களை தோல்வி அடைந்தவர்களாக பார்ப்பது சரியான அனுகுமுறை இல்லை.ஏழைகளுக்குத் தேவையான வசதிகளைஏற்படுத்தித் தந்தால் சில ஆண்டுகளிலே அவர்கள் தாங்களாகவே மேலெழுவார்கள். இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.