கொல்கத்தா
பிரபல நடிகை லாக்கெட் சட்டர்ஜி மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி தொகுதி எம்பியாக உள்ளார். பாஜக கட்சியைச் சேர்ந்தவரான இருவருக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்த நிலையில் தனிமையில் இருந்தார். கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று லாக்கெட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஒரே தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். லாக்கெட் சட்டர்ஜியின் மூலம் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காரணம் ஜூன் 19-ஆம் தேதி லடாக் எல்லையில் அம்மாநிலத்தில் பலியாகிய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஜூன் 24-ஆம் தேதி ஹவுராவில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த 2 நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் தனிமைப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டனர்.