tamilnadu

img

கொரோனா தாக்கம்: எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு தடை

காத்மாண்ட்,மார்ச் 13- கொரோனா அச்சம் கார ணமாக எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களை யும் நேபாள அரசு நிறுத்தி யுள்ளது. உலகம் முழுவதும் கொ ரோனா வைரஸ், மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. அனைத்து நாடுகளும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி உள்ளன.  இந்நிலையில் நேபாள நாட்டில் உள்ள புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலை யேற்றம் தொடர்பான அனை த்து பயணங்களும் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளன. மலையேற்ற வீரர்களுக்கான அனுமதி வழங்குவது நிறுத் தப்பட்டதையடுத்து எவ ரெஸ்ட் சிகரம் மூடப்பட்டது என்று  சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ்பட்டா ராய் தெரிவித்துள்ளார்.