புதுதில்லி:
கொரோனா தொற்று தடுப்பில் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் மத்திய தொகுப்பில் இருந்து உள்ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில், முதல் ஆரம்பமாக மத்திய தொகுப்பில் இருந்து 2020 - 21 கல்வியாண்டுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சை பணி, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர் களை கவுரவிக்கும் வகையிலேயே இந்த உள்ஒதுக்கீடு அறி விக்கப்பட்டிருக்கிறது.மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது வேறு மருத்துவ பணியாளர்களாகவோ இருந்து கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த பலனை பெறலாம். இதைத்தவிர கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற சுகாதாரப்பணியாளர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் உள்ஒதுக்கீடு பெற வாய்ப்புள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.