விஜயவாடா
நாட்டின் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவில் கொரோனா அச்சம் காரணமாக 3 மாதமாக மூடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் கோவிலுக்குள் நடைபெறும் முக்கிய பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன.
இந்நிலையில், மத்திய அரசின் கொரோனா ஊரடங்கு தளர்வு விதிமுறைப்படி மாநில அரசு கடந்த மாதம் 11-ஆம் தேதி திருப்பதி கோவிலை திறந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.