நாகப்பட்டினம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட முன்னாள்செயலாளரும் நாகப்பட்டினம் முன்னாள் மாவட்டக் கவுன் சிலருமான தோழர் ஏ.வி.முருகையன் காலமானார். அவரது படத் திறப்பு நிகழ்ச்சி, நாகை மாவட்டம், கீழையூர்ஒன்றியம், வெண்மணச்சேரியில் ஆகஸ்ட் 25 செவ்வாயன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சிபிஎம்கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமைவகித்தார். கட்சியின் மூத்த தலைவர் எம்.நடராஜன் படத்தைத் திறந்து வைத்தார். தோழர் ஏ.வி.முருகையன், துணைவியார் ஏ.வி.எம்.ஜெயம்,மகன் ஏ.வி.எம். பகத்சிங், மருமகள் ஜி.ஏ.ஜானகி பகத்சிங்ஆகியோர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
சிபிஎம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள்உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், ஜி.ஆனந்தன், சிபிஐ தேசிய கவுன்சில் உறுப்பினர் கோ.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திப் புகழுரையாற்றினர்.நிகழ்ச்சியில் மாதர் சங்கமாவட்டச் செயலாளர் த.லதா, சி.பி.எம். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், வி.அம்பிகாபதி, ஏ.வேணு, ப.சுபாஷ்சந்திரபோஸ், எம்.ஜெயபால், கே.கிருஷ்ணன், எஸ்.சுபாதேவி, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், வி.ச.மாவட்டக்குழு பி.சந்திரன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.வெங்கட் ராமன், நாகை நகரச் செயலாளர் (பொ) சு.மணி, சொ.கிருஷ்ணமூர்த்தி, ஜி.வெங்கடேசன், நா.சத்தியசீலன், அதிமுக நிர்வாகிகள் எஸ்.பால்ராஜ், பாலை செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.