tamilnadu

img

சீனாவின் ரேபிட் கிட் சோதனைக் கருவிகள் ஆர்டர் ரத்து.... ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லையாம்

புதுதில்லி: 
சீனா கொரோனா சோதனைக் கருவிகள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால்  ஒரு ரூபாயை கூட இழக்கமாட்டோம் என மத்திய அரசு சமாதானம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்த சீனாவிடம் இருந்து 30 லட்சம் ரேபிட் கிட்டுகளை இந்தியா வாங்கியது. அந்த ரேபிட் கிட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சீனாவின் ரேபிட் கிட்டுகளில் பரிசோதனை முடிவுகள் துல்லியம் இல்லை என புகார் எழுந்தது. இதை தொடர்ந்து  அந்த சோதனைகளை நிறுத்திவைக்க இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது.
சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கிட்டுகளுக்கு இந்திய இரண்டு மடங்கு பணம் அளித்து உள்ளது என தற்போது தெரியவந்து உள்ளது. கொரோனா சோதனை கருவிகள் இந்திய விநியோகஸ்தரால் அதிக விலைக்கு அரசிற்கு விற்கப்பட்டு  உள்ளது.

கொரோனா பரிசோதனை கருவி விநியோகஸ்தருக்கும் இறக்குமதியாளருக்கும் இடையிலான சட்ட மோதலிலிருந்து இது வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா கொரோனா சோதனைக் கருவிகள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது.  அதே நேரத்தில் ஒரு ரூபாயை கூட இழக்க மாட்டோம் என மத்தியஅரசு சமாதானம் கூறியுள்ளது.

மத்திய அரசின் விளக்கம்
இரண்டு சீன நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்) "குறைவான செயல்திறன்" கொண்டவை என்று  அறிவித்துள்ளது. இரு நிறுவனங்களும் தயாரித்த கிட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு  மாநிலங்களையும் மருத்துவமனைகளையும் கேட்டுக் கொண்டது.  "உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதால் (100% முன் தொகையுடன் கொள்முதல் செய்யப் போவதில்லை). இந்திய அரசு ஒரு ரூபாயை இழக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

அதேநேரத்தில், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்கள் புதிய சோதனைக் கருவிகளைப் பற்றி புகாரளித்தன, அவற்றில் 5.4 சதவீத துல்லியம் மட்டுமே இருப்பதாகக் கூறின. அரசாங்கத்தின் கொள்முதல் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. குறிப்பாக கிட்டுகள் வாங்கியதில் கொள்ளை நடந்திருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். சோதனைக் கருவிகளை இறக்குமதியாளர்கள் சீனாவிலிருந்து ரூ .245 க்கு வாங்கினார்.  இந்திய விநியோகஸ்தர்களான ரியல் மெட்டபாலிக்ஸ்,  அர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகியவை இந்த கிட்களை அரசாங்கத்திற்கு தலா ரூ .600 க்கு விற்றன, அதாவது 140 சதவீதம் லாபம் பார்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலமோ... ஏலம்
கொரோனா கிட் வாங்கியதில் கொள்ளை நடைபெற்ற செய்தி வெளியான நிலையில் திங்களன்று மத்திய அரசு தன்னிலை விளக்கமளித்துள்ளது. அதில், " எந்தவொரு எதிர்ப்பு சோதனை கருவிகளுக்கும் முன்கூட்டியே பணம் செலுத்தவில்லை ரூ,600 முதல் ரூ.1,204 வரை டெண்டர்கள் வந்திருந்தன.  இதில் மிகக் குறைந்த டெண்டரை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளது.